Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸின் சலார் 2 எப்போது?... அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

vinoth
சனி, 9 நவம்பர் 2024 (09:43 IST)
பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பிருத்விராஜ் நடித்த சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  ஆனால் ரிலீஸுக்குப் பின் நடந்ததுதான் எதிர்பாராதது. படம் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

முதல் பாகத்தின் தோல்வியால் இரண்டு பாகங்களாக உருவான சலார் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. சலார் முதல் பாகத்தின் தோல்வியால் இரண்டாம் பாகத்தை கைவிடப்போவதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படக்குழு அதை மறுத்தது. சலார் 2 படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சலார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் பிரபாஸை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் சலார் 2 படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் அடுத்தடுத்த படங்கள் அதற்கடுத்த ஆண்டுகளில் வரிசையாக ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அஜித்குமாரின் கார் ரேஸை இலவசமாக லைவில் பார்ப்பது எப்படி?

எனக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.. எனக்கு புடிச்சத செய்வேன்! - கார் ரேஸ் குறித்து அஜித்குமார் பேட்டி வைரல்!

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments