Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபுதாபியில் ஆக்ரோஷமாக சண்டை போட்ட பிரபாஸ்

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (17:54 IST)
‘சாஹு’ படத்துக்காக அபுதாபியில் ஆக்ரோஷமாக சண்டை போட்டுள்ளார் பிரபாஸ்.

 
‘பாகுபலி’யைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்துவரும் படம் ‘சாஹு’. சுஜீத் இயக்கிவரும் இந்தப் படத்தில், ரசிகர்கள் இதுவரை காணாத மாஸ் நிறைந்த வேடத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அவருக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
 
யுவி கம்யூனிகேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். பிரபாஸுக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. அபுதாபி அரசரின் சிறப்பு அனுமதியுடன் மிகப்பெரிய சண்டைக்காட்சி ஒன்று படம்பிடிக்கப்பட்டுள்ளது.
 
ஒரே ஷெட்யூலில் 20 நாட்கள் தொடர்ந்து இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கொதிக்கும் பாலைவனத்தில், ஒளிப்பதிவாளர் மதியின் 6 கேமரா செட்டப்பில் 37 கார்களையும், 5 ட்ரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments