Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரகப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்!

vinoth
வியாழன், 5 டிசம்பர் 2024 (08:08 IST)
லத்திகா என்ற மொக்கை படத்தை ஒரு வருடத்துக்கும் மேல் சொந்த செலவில் ஓட்டி ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்து சினிமா உலகினரை ‘யார்றா இவரு’ என வியக்க வைத்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதன் பின்னர் சந்தானத்தோடு நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் வெற்றியால் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை நடிகராக உருவானார்.
 
ஆனாலும் செக் மோசடி வழக்கில் கைது என சில சர்ச்சைகளில் சிக்கி சிறை சென்று வந்தார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு முன்பு கிடைத்த புகழ் வெளிச்சம் தற்போது கிடைப்பதில்லை. அவரைப் படங்களில் பார்த்தும் பல மாதங்கள் ஆகிவிட்டது.

இந்நிலையில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிகிச்சைக்கு சென்ற அவரை மருத்துவர்கள் ஒரு வாரம் உள்நோயாளியாக தங்கி சிகிச்சைப் பெற சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூன்று பாகங்களாக உருவாகிறதா வாடிவாசல்?.. வெற்றிமாறன் போடும் மெஹா பிளான்!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் முட்டிக்கொண்ட இயக்குனரும் நடிகரும்..!

விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வராதா?... உறுதியாய் சொல்லும் பிரபலம்!

தங்கலான் ஏன் மக்களுக்கு connect ஆகலன்னு யோசிச்சிட்டு இருக்கேன்… பா ரஞ்சித் வருத்தம்!

மமிதா பைஜுவை நான் அடித்தேனா?... குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த இயக்குனர் பாலா!

அடுத்த கட்டுரையில்
Show comments