Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது? ஜெயம் ரவி வெளியிட்ட தகவல்!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (14:50 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் இதுவரை 450 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுபற்றி சமீபத்தில் பேசியுள்ள நடிகர் ஜெயம் ரவி “மணிரத்னம் சார் சொன்னது போல ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும். இல்லையென்றால் மேலும் இரண்டு மாதங்களுக்குள் ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments