Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் பொன் மாணிக்கவேல்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (15:30 IST)
நடிகர் பிரபுதேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு தயாராக காத்திருக்கிறது.

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு  தேவி, குலேபகாவலி, மெர்க்குறி, சார்லி சாப்ளின் 2 என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. கண்டேன் பட இயக்குனர் ஏசி முகில் இயக்கியுள்ள இப்படத்தில் முதன்முறையாக அதிரடி போலீஸ் அதிகாரியாக பிரபு தேவா நடித்துள்ளார்.ஜோடியாக நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை ஜெயம் ரவி நடித்த "டிக் டிக் டிக்" படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நேமிசந்த் ஜாபக் தயாரித்துள்ளார்.  இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஜபக் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியிடம் சாட்டிலைட் உரிமம் விற்கப்பட்ட நிலையில் இப்போது டிஜிட்டல் உரிமையை அதன் கிளை நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலேயே வெளியிட முடிவு செய்து அவர்களிடமே விற்பனை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தனுஷின் ‘ராயன்’ படத்தின் செகண்ட் சிங்கிள்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து ஒரு கானா பாடலா?

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா! ரீசண்ட் போட்டோ ஆல்பம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் நாயகி நயன்தாராவா? அடிச்சுவிடும் நெட்டிசன்கள்..!

கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்… கருணாஸ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments