Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (21:56 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் காவல்துறை அடக்குமுறைகளை எடுத்துக்காட்டும் விதமாக உருவான இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டது.
 
25 ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது.
 
அதில் குறிப்பாக வன்னியர் சாதி குறித்து படத்தில் நடித்திருந்த போலீசாருக்கு காட்சி வைக்கப்பட்டிருந்தது. அது குறிப்பிட்ட சாதியினரை கொச்சைப்படுத்துவதாக அரசியல் கட்சி தலைவர்கள் முதல் அந்த சாதியை சேர்ந்தவர்கள் வரை சூர்யாவிற்கு எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சற்றுமுன் சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

எதிர்காலத்தில் நடக்கும் கதையா விஜய்யின் கோட் திரைப்படம்?

விஜய் பிறந்தநாளில் இணையத்தில் வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments