Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாது மல்லுக்கட்டும் பேட்ட – விநியோகஸ்தர்கள் கடும் போட்டி!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (08:34 IST)
அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் ரஜினிகாந்த் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக இரு படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

அஜித் நடிப்பில் ஓராண்டு இடைவெளிக்குப் பின் உருவாகியிருக்கும் பேட்ட திரைப்படம் கடந்த தீபாவளிக்கே வெளிவருவதாக இருந்தது. ஆனால் தமிழ் சினிமா சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்பில் ஏற்பட்ட இடையூறுகளால் படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஆறு மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பும் முடிவடந்து பின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன் தமிழ்நாடு விநியோக உரிமையை கே. ஜே. ஆர். ஸ்டூடியோஸ் கைப்பற்றியுள்ளது. அவர்கள் தற்போதே மும்முரமாக திரையரங்குகளைக் கைப்பற்றும் வேலைகளில் இறங்கி பெருவாரியான தியேட்டர்களைக் கைப்பற்றி விட்டனர்.

இதற்கிடையில் எதிர்பாராத திருப்பமாக பொங்கல் ரேசில் இணைந்தது ரஜினியின் பேட்ட. ரஜினி, விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டளத்தோடு தொடங்கிய பேட்ட படப்பிடிப்பு எதிர்பார்த்ததற்கு முன்பாகவே முடிந்து விட்டதால் பொங்கலுக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

இதனால் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் திரையரங்குகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் என சினிமா வட்டார தரப்பில் பேச்சு எழுந்தது. அதனால் விஸ்வாசம் அல்லது பேட்ட இவற்றில் எதாவது ஒரு படம் பின் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு படங்களுமே பொங்கல் வெளியீட்டில் உறுதியாக இருக்கின்றன.

விஸ்வாசம் படத்தின் திரையரங்கக் கைப்பற்றும் திட்டத்தால் அதிர்ந்து போன சன் பிக்சர்ஸ் தங்கள் பேட்ட திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட படத்த்தின் உலகளாவிய விநியோக உரிமையை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி தானுவிடம் ஒரு மிகப்பெரிய தொகைக்கு விற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தானு மார்க்கெட்டிங்கில் உத்தியில் புலி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும் தானு தனது தயாரிப்பில் ரஜினியை வைத்து எடுத்த கபாலி படத்தினை சிறப்பான விளம்பரத்தால் மிகபெரிய வெற்றிப் படமாக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கலுக்கு திரையில் ரஜினியும் அஜித்தும் மோதிக்கொள்ளும் மோதலை விட திரைக்கு மறைவில் இரு படங்களின் தயாரிப்பாளர்களும் மோதிக்கொள்வது மிகப்பெரியப் போட்டியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments