Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது! சிம்புவின் பெரியார் குத்து ஆல்பம் !

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (15:40 IST)
நடிகர் சிம்பு  நடித்திருக்கும் பெரியார் குத்து ஆல்பம் வெளியானது.


 
நடிகர் சிம்பு சினிமாக்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடனம், பாடல் என அனைத்திலும் அவருக்கு விருப்பம் அதிகம் உள்ளதால் அடிக்கடி ஆல்பங்களில் பாடி வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இவர் பெரியார் குத்து என்ற ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். இதனை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். ரமேஷ் தமிழ்மணி இதற்கு இசை அமைத்திருக்கிறார் . 
 
இதனை தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்துள்ளனர். ரெபெல் ஆடியோ நிறுவனம் இந்த ஆல்பத்தை ரிலீஸ் செய்துள்ளது . 
 
உலக புகழ் பெற்ற பாடகர் ஏகான் (Akon) உடன் லவ் அந்தம் பாடலை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள "பெரியார் குத்து ஆலப்பும்" சிம்புவின் மாஸான நடனத்தால் அலறவிடுகிறது. 
 
"உண்மையான நாய் அது நன்றியோடு கெடக்கும், வேஷம் போட்டு வந்த நாய் மானம் கெட்டு குறைக்கும்" போன்ற தத்துவமான பாடல் வரிகள் சிம்புவின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது . 
 
திராவிட மண்ணின் மைந்தனான சிம்புவின் இப்பாடல் நிச்சயம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் விரைவில் லவ் அந்த்தம் பாடலையும் வெளியிடுவார் என ஆர்வத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டைகர் கா ஹுக்கும்..! தெறிக்கும் மெஷின் கன், ராக்கெர் லாஞ்சர்! - ஜெயிலர் 2 Announcement Teaser!

கீர்த்தி சுரேஷ் தல பொங்கல்.. தளபதி விஜய் கலந்து கொண்டு சர்ப்ரைஸ்..!

என் காதுக்கு நல்ல விமர்சனங்கள் மட்டும்தான் வருகின்றன… கேம்சேஞ்சர் குறித்து ஷங்கர் பதில்!

சம்யுக்தாவின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கிளாமர் லுக்கில் ஜொலிக்கும் ராஷி கண்ணா… கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments