Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் விஜய் சேதுபதி… ஆனால் தமிழில் இல்லை!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (10:54 IST)
அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கியக்கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.

இந்த படத்தை பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டிகள் நிலவி வருகின்றன. தமிழில் சிம்புவும் பார்த்திபனும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல இந்த படத்தில் நடிக்க பவன் கல்யாண் ஆர்வமாக இருப்பதாகவும், தன்னுடன் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments