Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபன் வடிவேலு இணையும் பாரதி கண்ணம்மா 2?

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (08:57 IST)
இயக்குனர் சேரன் இயக்கிய முதல் திரைப்படமான பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் கதை சீரியஸாக சென்று கொண்டிருந்தாலும் அதில் பார்த்திபன் வடிவேலுவின் காமெடி அவ்வப்போது வந்து பார்வையாளர்களை குஷிப்படுத்தும். இந்த படத்தில் காமெடியை இன்னும் பலர் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சேரனின் இயக்கத்தில் விரைவில் ’பாரதி கண்ணம்மா 2’ படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்திபன் மற்றும் வடிவேலு மீண்டும் இணைந்து காமெடியில் கலக்கப் போவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது 
 
வடிவேலு மற்றும் பார்த்திபன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி செய்திருந்தாலும் பாரதி கண்ணம்மா’ படத்தின் காமெடியை யாராலும் மறக்க முடியாது. முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் இருவரும் ‘பாரதி கண்ணம்மா 2’ படத்தில் கலக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments