Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ரஸ் மீட்டில் அட்ராசிட்டி செய்த சந்தானம் பட இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:44 IST)
சந்தானம் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின் இயக்குனர் ஜான்சன் ப்ரஸ் மீட்டில் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ஜான்சன். கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை கே.குமார் என்பவர் தயாரித்துள்ளார்.  இப்படம் காமெடி ஜர்னலில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. கானா பாடகராக இந்த படத்தில் சந்தானம் நடித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணின் இசை பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் ப்ரஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது. அப்போது இயக்குனர் ஜான்சன் மிக தாமதமாக வந்து பேசினார். அப்போது ஏன் தாமதம் எனக் கேட்டதற்கு ‘லேட் ஆயிடுச்சு… எப்படி சொன்னாலும் அதான்… சந்தானம் சார்தான் எனக்கு வாழ்க்க கொடுத்தாரு… எனக்காக காத்திருக்கும் அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லை… ஆனால் இந்த டீம் வொர்த்தான டீம்… மாஸ்டர் படம் லாக்டவுனுக்கு பிறகு ரிலிஸ் ஆச்சு… அதற்கு பிறகு நம்ம மாஸ்டர் படம்தான் (சந்தானத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே). சொல்லி சம்பவம் செய்வது போலதான்’ என என்னவெல்லாமோ உளறுவது போல பேசினார். இதனால் பத்திரிக்கையாளர் மட்டுமல்ல மேடையில் இருந்தவர்களே முகம் சுளிக்க ஆரம்பித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

கிங் ஆஃப் கிங்ஸ் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருப்பதாக இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேட்டி.

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கி.. தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்..!

திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா-பி.சுசிலா நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்பு!

அக்ஷய் குமார் பெயரை பயன்படுத்தி தமிழ் நடிகை மோசடியா? தயாரிப்பாளரின் அதிர்ச்சி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments