Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 2 தமிழ் பதிப்பு ட்ரெய்லர் மட்டும் இணையதளத்தில் கசிந்தது எப்படி?

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (14:56 IST)
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம்  28ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 
இந்தியாவே ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த ‘பாகுபலி’ டிரெய்லர் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முதன்முதலில் தியேட்டரில் டிரெய்லரை ரிலீஸ் செய்வதாகவும் கூறப்பட்டது. பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பு ட்ரெய்லர்  மட்டும் இணையதளத்தில் கசிந்துவிட்டது. அந்த ட்ரெய்லர் கசிந்த வேகத்தில் அதை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் பலரும் ஷேர்  செய்தனர். பாகுபலி 2 ட்ரெய்லர் கசிந்த விஷயம் அறிந்த படக்குழுவினர் வேறு வழியில்லாமல் அதை அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வெளியிட்டனர். அனைத்து மொழி பதிப்புகளின் ட்ரெய்லர்களும் முன்கூட்டியே வெளியிடப்பட்டது.
 
பாகுபலி 2 படத்தின் கிராபிக்ஸ் பணி நடந்தபோது சில காட்சிகள் கசிந்தன. உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்து  கிராபிக்ஸ் டிசைனர் கைது செய்யப்பட்டார். காட்சிகள் கசிந்த நிலையில் தற்போது ட்ரெய்லரும் கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

நாளை நடக்கிறது அஜித் & கோ பங்கேற்கும் ’24 H’ ரேஸ்… தயாரான AK!

பிரேக்கிங் பேட் சீரிஸில் இடம்பெற்ற வீட்டை 34 கோடி ரூபாய்க்கு விற்க உரிமையாளர் முடிவு!

ரிலீஸ் தேதியில் சிறு குழப்பம்… வீர தீர சூரன் படக்குழு எடுக்கப் போகும் முடிவு என்ன?

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments