Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊர்வசி ரவுத்தலாவிடம் திருமண புரபொசல் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (14:08 IST)
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலாவுக்கு கிரிக்கெட் வீரர் காதலை தெரிவித்ததுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர், சிங் சாப் தி கிரேட் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமனார்.

இதையடுத்து, கன்னட சினிமாவில் அறிவாடா என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.  தமிழில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் லெஜண்ட் படத்திலும் நடித்திருந்தார். இதுதவிர  பெங்காலி, மொழி சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  சமூக வலைதளங்களில் தன் புகைப்படங்கள் பதிவிட்டு, ரசிகார்களின் கேள்விக்கு பதிலளித்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீம் ஷர்மாவின் பிறந்த நாளுக்கு தன் சமூகதளப் பக்கத்தில் வாழ்த்துகள் கூறினார்.

இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்   நசீம் ஷர்மா, நடிகை ஊர்வசிக்கு மறைமுகமாக திருமண விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஊர்வசியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஊடகங்கள் எந்தவிதமான செய்திகளையும் உருவாக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

ஏற்கனவே, இந்திய வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாயிப் மாலிக்கை திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

சூரியின் அடுத்த படத்தில் இணையும் பிரியாமணி!

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!

அடுத்த கட்டுரையில்