Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ரஞ்சித் என்னிடம் உதவி இயக்குனராக சேர ஆசைப்படவில்லை…” வெங்கட்பிரபு சொன்ன சீக்ரெட்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:04 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடந்தது. அதில் இயக்குனர் வெங்கட்பிரபு கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். அதில் “பா ரஞ்சித்தை சென்னை 28 படத்தின் போது நான்தான் உதவி இயக்குனராக பணியாற்ற அழைத்தேன். ஆனால் அவர் அப்போது இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட சொல்லிக் கேட்டார். ஆனால் என்னிடம் மாட்டிக்கொண்டார்” என ஜாலியாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் ஃபோட்டோஸ்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments