Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகவா லாரன்ஸுடன் ஓவியா; வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (15:13 IST)
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் படம் ‘காஞ்சனா 3’ (முனி 4). சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். ஓவியா  மட்டுமல்ல, ‘முனி’ படத்தில் நடித்த வேதிகாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். அத்துடன், நிகிதா என்ற புதுமுக ஹீரோயினையும் இந்தப் படத்தில்  அறிமுகப்படுத்துகின்றனர். 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஓவியா, வேதிகா, நிகிதா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா மற்றும் வேதிகா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 
இப்படத்தில் ஓவியா, வேதிகா மற்றும் நிகிதா என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும்  நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வருகிறார். 
இந்நிலையில் நடிகை வேதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் 'காஞ்சனா 3' படப்பிடிப்பு தளத்தில் ராகவா லாரன்ஸுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. இப்படம் கோடை விடுமுறையில் குழந்தைகளைக் குறிவைத்து வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments