Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா2 'படத்தின் தொடக்க விழா!

J.Durai
திங்கள், 14 அக்டோபர் 2024 (08:20 IST)
'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி -  எஸ் எல் வி சினிமாஸ் - கூட்டணியில் உருவாகும் '#நானிஓடேலா 2 'எனும் திரைப்படத்தின் தொடக்க விழா  நடைபெற்றது.
 
'நேச்சுரல் ஸ்டார்' நானி, 'தசரா' எனும் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரியுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக இணைகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ' #நானி ஓடேலா 2 ' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 'இந்த திரைப்படம் 'தசரா' திரைப்படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்' என நானி அண்மையில் தெரிவித்திருந்தார். 
 
'தசரா' திரைப்படம் ஏராளமான விருதுகளை குவித்து பெரும் புகழை பெற்றுள்ளதால், இந்த பான் இந்திய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உற்சாகத்துடன் அதிகரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கான தொடக்க விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் நவராத்திரி திருவிழாவை தேர்வு செய்தனர். 
 
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா அழுத்தமான மற்றும் வாழ்க்கையை விட பெரிய கதையை அடர்த்தியான திரைக்கதையுடன் வடிவமைத்துள்ளார். இதில் நானியை இதற்கு முன் கண்டிராத வகையில் மாஸான கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்தவிருக்கிறார். இதற்காக நடிகர் நானி.. அவருடைய தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். இது அவரது நடிப்பில் தயாராகும் மிகவும் கொடூரமான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 
 
தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி  பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.
 
பன்முக ஆளுமைக்கு பெயர் பெற்ற நானி-  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வெற்றிகரமான மற்றும் டைனமிக் கூட்டணியுடன் தயாராகும் இந்த திரைப்படம்.. நானியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

எல்லாத்துக்கும் காரணம் பாலா அண்ணன்தான்… வணங்கான் மேடையில் சூர்யா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments