Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6500 திரையரங்குகளில் சாதனை படைக்கவிருக்கும் பாகுபலி 2!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (12:38 IST)
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் படம் பாகுபலி 2. இதனை இயக்கியவர் ராஜமெளலி.

 
பாகுபலி முதல் பாகம் ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்தது. தற்போது பாகுபலியின் 2-ம் பாகமான,  'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நான்கு மொழிகளிலும் சேர்த்து யூடியூப் இணையத்தளத்தில் 6.50 கோடி  தடவை பாகுபலி 2 டிரெய்லர் பார்க்கப்பட்டது. அதேபோல முதல் 24 மணி நேரத்தில் உலகளவில் அதிக தடவை பார்க்கப்பட்ட டிரெய்லர்கள் வரிசையில் 13-வது இடத்தைப் பிடித்தும் சாதனை செய்துள்ளது. இதுவரை வெளிவந்த எந்தவொரு இந்தியத் திரைப்படத்தின் டிரெய்லரும் இத்தகையை எண்ணிக்கையை எட்டியதில்லையாம்.
 
இந்நிலையில் பாகுபலி 2 படம், இந்தியாவில் மட்டும் 6500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்திய அளவில் வேறெந்த  படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை. எனவே ஏப்ரல் 28 அன்று ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்ப் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பாளர்… என்னை விரட்டிவிட்டார்கள்- சந்தோஷ் நாராயணன் ஜாலி பேச்சு!

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? மன்சூர் அலிகான் மகன் கைது!

கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!

சச்சினின் கைகளை விடாமல் பற்றிக்கொண்ட வினோத் காம்ப்ளே.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

புஷ்பா இரண்டாம் பாகத்தோடு முடியாது… கடைசி நேரத்தில் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments