Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தி- ன்’ 50 வது பிறந்தநாளை’ முன்னிட்டு ... Common Dp டுவிட்டரில் டிரெண்டிங்..

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (21:52 IST)
நடிகர் அஜித்தின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் Common Dp உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.

ஹெ.  வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் படம்  ’வலிமை’ . இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்,எங்கள் நிறுவனம் கொடுத்த முந்தைய அறிக்கையில் வரும் மே 1 ஆம் தேதி அஜித்குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் எங்கள் நிறுவனத்தில் தயாரிப்பில் உருவான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

அந்த அறிவிப்பு வரும்போது, கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ அதன் தாக்கம் சுனாமி போலத் தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

பலர் தற்போது பொருளாதரம் இழந்து உற்றார் , உறவினர் உயிர் இழந்து நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.
எனவே இந்தச் சூழ்நிலையில் ஜி ஸ்டுடியோஸ் பே
வியூ ப்ரோஜெக்ட்ஸ் இப்படத்தில் உள்ள கலைஞர்கள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முடிவின்படி வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் மற்றோரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

நாம் அனைவரும் ஒன்றினைந்து அனைவரின் நலத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிரார்திப்போம் எனத் தெரிவித்திருந்தார்.#ValimaiUpdate
இந்நிலையில் இன்னும் வலிமை படத்தின் ஒரு வார ஷூட்டில் பாக்கி இருக்கும் நிலையில், கூடுமானவரை படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிடலாம் என்று படக்குழுவினரை நடிகர் அஜித்குமார்  உற்சாகப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் CommonDp உருவாக்கி டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments