Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு மீது கோபமாக இருக்கும் அஜித் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (10:14 IST)
சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியால், அவர் மீது அஜித் ரசிகர்கள் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

 
ஒரு காலத்தில் தன்னை அஜித்தின் ரசிகராக சொல்லிக் கொண்டவர் சிம்பு. ஆனால், தனக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல தற்போது பேசியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “தோற்றுப்போன அஜித் படத்தின் கட்-அவுட்டை  வைத்துக்கொண்டு ‘தல’ என்று கத்தியவன் நான். அவர் தற்போது வளர்ந்து விட்டார். இனிமேல் நான் அவரைப் பற்றிப்  பேசமாட்டேன்.
 
எனது கடின உழைப்பின் பயனாக, எனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால், அஜித்தின் புகழை நான் பயன்படுத்திக் கொள்ள நினைப்பதாக சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள் நினைப்பது குறித்து எனக்கு கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்  சிம்பு.
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம், இந்த வாரம் ரிலீஸாகிறது. இந்நிலையில், அஜித் ரசிகர்களிடம் எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறார் சிம்பு என்கிறார்கள்.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

எதிர்காலத்தில் நடக்கும் கதையா விஜய்யின் கோட் திரைப்படம்?

விஜய் பிறந்தநாளில் இணையத்தில் வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments