Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவின் பாலியின் தமிழ்ப் படம்

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (13:17 IST)
நிவின் பாலி நடித்துள்ள தமிழ்ப் படமான ‘ரிச்சி’யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 
 
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நிவின் பாலி. அவரின் சூப்பர் ஹிட் படமான ‘பிரேமம்’ தமிழில் ரிலீஸாகாவிட்டாலும், மலையாளத்தில் பார்த்தே அவரிடம் மனதைப் பறிகொடுத்தனர். இந்நிலையில், இன்னொரு தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நிவின் பாலி. மிஷ்கின் உதவியாளர் கெளதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார். 
 
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே படத்தைத் தொடங்கினாலும், ஜனவரி மாதம் தான் ‘ரிச்சி’ என்று படத்தின் தலைப்பையே அறிவித்தனர். நிவின் பாலி மட்டுமல்லாமல், ‘சதுரங்க வேட்டை’ நட்டியும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். ஷ்ரதா கபூர், ‘கள்ளப்படம்’ லட்சுமி பிரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜும், விஷாலின்  தந்தை ஜி.கே.ரெட்டியும் நடிக்கின்றனர். 
 
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ரவுடி கேரக்டரில் நிவின் பாலியும், படகுகளை சரிசெய்யும் மெக்கானிக் கேரக்டரில் நட்டியும் நடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் ரிலீஸ்  ஆகும் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராம்சரண் படத்தில் இருந்தும் விலகினாரா ஏ ஆர் ரஹ்மான்?... படக்குழு அளித்த பதில்!

சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘பராசக்தி’ டைட்டில் வைக்கக் கூடாது… சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு!

தப்பாகப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்பார்.. மிஷ்கின் இதே வேலையாப் போச்சு– விஷால் காட்டம்!

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன்… பிரித்விராஜ் பகிர்ந்த தகவல்!

நான் ஆணையிட்டால்.. எம்ஜிஆர் ஸ்டைலில் செகண்ட் லுக்! - அடுத்தடுத்த அப்டேட்டால் திணறும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments