Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிப்பு என்பது உடல் எடையை ஏற்றி இறக்குவது அல்ல –தேசிய விருது குறித்து நித்யா மேனன்!

vinoth
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (07:38 IST)
சில தினங்களுக்கு முன்னர் 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் தேசிய விருது குறித்துப் பேசியுள்ள நித்யா மேனன் “திருச்சிற்றம்பலம் படத்தில் எனது நடிப்பு சாதாரணமாக தெரியும். ஆனால் அதன் பின்னுள்ள உழைப்பைப் புரிந்துகொண்ட தேர்வுக்குழுவுக்கு நன்றி. சிறந்த நடிப்பு என்பது எடைக்குறைப்போ அல்லது அதிகரிப்போ அல்லது செயற்கையாக உடலை மாற்றிக் கொள்வதோ கிடையாது. அதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதிதான். அதுவே முழுமை கிடையாது.

இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், தனுஷ் மற்றும் நான் ஆகிய நால்வருக்குமானது. ஏனென்றால் அந்த படத்தில் நடிகருக்கு இணையாக வேடத்தில் நான் இதுவரை நடித்ததில்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

அட்லி &அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?... அவரே அளித்த பதில்!

பிரபல ஓடிடியில் ரிலீஸான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் ஜோடியாகும் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி!

சூர்யா & ஆர் ஜே பாலாஜி படத்தின் தலைப்பு இதுதானா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments