Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதின் சத்யாவும் இப்போது தயாரிப்பாளர்

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (12:48 IST)
சென்னை 600028, ராமன் தேடிய சீதை, திருடன் போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நிதின் சத்யா தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

 
நிதின் சத்யாவுக்கு தற்போது படங்கள் இல்லை. அதனால் அவரே தயாரிப்பாளராகி படம் தயாரிப்பது என முடிவு செய்து, பிளாஷ் கண்ணனோடு இணைந்து பிரைடே மேஜிக் என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
 
இந்த நிறுவனத்தின் சார்பில் நிதின் சத்யா தயாரிக்கும் முதல் படத்தை அறிமுக இயக்குநர் நந்தா மணிவாசகம் இயக்குகிறார். 
 
பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
 
தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் குறித்து நிதின் சத்யாவிடம் கேட்டதற்கு, திரைப்பட உலகில் இன்றியமையாததாக இருப்பது வெள்ளிக்கிழமை. அதனால் தான் எங்கள் நிறுவனத்திற்கு பிரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட் என்ற பெயரை தேர்ந்தெடுத்தோம். வலுவான கதைக்களமும், சிறந்த கதையம்சமும் கொண்ட தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறேன் என்றார்.
 
வாழ்த்துகள்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments