Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் பற்றி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Webdunia
சனி, 16 ஏப்ரல் 2022 (16:18 IST)
நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் ஆகும்.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரிலிஸுக்கான பணிகள் தொடங்க உள்ளன.

உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக ஆனதற்குப் பின்னர் வெளியாக உள்ள முதல் திரைப்படம் என்பதால் இதன் மீது பெரும் நம்பிக்கையில் இருக்கிறாராம். இந்நிலையில் படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இன்று மாலை இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளதாம் படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இசை நிகழ்ச்சி.. இளையராஜா அறிவிப்பு..!

திரையரங்குகள் கட்டணம் உயர்கிறதா? தமிழக அரசுக்கு வைத்த ஐந்து கோரிக்கைகள்..!

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகர் எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு..!

மீண்டும் கார் ரேஸ் போட்டியில் நடிகர் அஜித்.. நரேன் கார்த்திகேயன் வாழ்த்து..!

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments