Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம், ஜோடி நயன்தாரா

Webdunia
வியாழன், 19 பிப்ரவரி 2015 (09:31 IST)
அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் விக்ரம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.
 

 

 
ஆனந்த் சங்கர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர். துப்பாக்கி ஷுட்டிங்கில் ஆனந்த் சங்கரின் திறமையைப் பார்த்த தாணு, அரிமா நம்பி படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். விக்ரம் பிரபு நடிப்பில் உருவான படம் ஹிட்டானது.
 
அதனைத் தொடர்ந்து அவர் விக்ரமிடம் கதை கூறியதாகவும், விக்ரம் அந்தக் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படாமல் இருந்தது.
 
தற்போது 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வரும் விக்ரம் அது முடிந்ததும் கௌதம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதையடுத்து ஆனந்த் சங்கர் இயக்கும் படம்.
 
இதில் முதல்முறையாக நயன்தாரா விக்ரமுடன் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

Show comments