Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலமாவு கோகிலாவிற்கு இதுதான் அர்த்தமாம்?

Webdunia
வியாழன், 17 மே 2018 (20:19 IST)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா, சுருக்கமாக கோகோ என அழைகப்படுகிறது. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 
 
ஹீரோயினாக நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.
 
கோலமாவு கோகிலா யார் என்பதை அனிருத் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறாராம். ஒரு பெண் தன் வறுமையை போக்க போதை மருந்து கடத்தல் செய்து வாழலாம் என்று முடிவு செய்கிறார். அது என்ன ஆகிறது என்பதுதான் கதையாம்.
 
இந்த கதை கருவைத்தான் பிளாக் ஹியூமர் பாணியில் காமெடியா எடுத்திருக்கிறாராம் இயக்குனர் நெல்சன். மேலும், அனிருத் விரைவில் மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போவதாக அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments