Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேச்சுரல் ஸ்டார் நானி,சைலேஷ் கொலானு, வால் போஸ்டர் சினிமா, யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் இணையும் ஹிட்: கேஸ் 3!

J.Durai
வியாழன், 5 செப்டம்பர் 2024 (18:47 IST)
நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ந்து மாறுபட்ட கதைகளங்களில், ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான, சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படம் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டராக வெற்றி பெற்றுள்ளது.   ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களை தந்திருக்கும் நானி, அடுத்ததாக அவரது 32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகிறார். நானியின் கேரக்டரைப் பற்றிய ஸ்னீக் பீக் மூலம், அவரது அடுத்த படமான  ஹிட்  கேஸ் 3  பட அறிவிப்பு,    இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, வால் போஸ்டர் சினிமாவின் பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில், டாக்டர் சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்குகிறார்.
 
Hunter's Command என பெயரிடப்பட்ட கிளிப், ஒரு HIT அதிகாரி பனி மலைகளில் காரை ஓட்டுவது மற்றும் ஒரு ஜோடி போலீஸ் அதிகாரிகள் அவரைத் துரத்துவது போன்ற ஒரு புதிரான குறிப்பில் தொடங்குகிறது. HIT அதிகாரி ஆபத்தில் இருப்பதாக ஒரு அதிகாரி மற்றவரை எச்சரிப்பதால் நம் பதற்றம் அதிகரிக்கிறது.  HIT அதிகாரியே ஆபத்தானவர் என்றும் அவர் பெயர் அர்ஜுன் சர்க்கார் என்றும் அந்த அதிகாரி தெரிவிக்கிறார்.
 
அர்ஜுன் சர்க்கார் கெட் செட் அண்ட் கோ என்று சொல்லும்  உச்சரிப்புடன் வீடியோ முடிவடைகிறது.
 
நானி சுருட்டு புகைக்கும்போதும், காரை ஓட்டும்போதும் ரத்தம் தோய்ந்த கைகள் மற்றும் கோடரியுடன் ஸ்டைலாகவும், கொடூரமாகவும் தோன்றுகிறார். அர்ஜுன் சர்க்காராக அவரது சித்தரிப்பு மிரட்டல்லாக இருக்கிறது. அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தின் பெயர் படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் போலவே சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது.
 
முன்னதாக HIT பட வரிசையை இயக்கிய  டாக்டர் சைலேஷ் கொலானு  ஹிட் : கேஸ் 3  படத்தை இயக்குகிறார். முந்தைய படங்களைத் தாண்டி இன்னும்  ஸ்டைலான, பிரமாண்டமான படமாக இருக்குமென்பதை டீசர் உறுதி செய்கிறது. 
 
பிரபல ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸால் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் பிரமிப்பூட்ட்டுகின்றன, அதே சமயம் மிகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மட்டும் செய்து வரும் மிக்கி ஜே மேயர் தனது துடிப்பான இசை மூலம் டீசரின் தீவிரத்தை உயர்த்துகிறார்.
 
 கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீ நாகேந்திரா தங்கா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.
 
HIT தொடரின் மூன்றாம் பாகத்தில் அர்ஜுன் சர்க்காரின் கதாபாத்திரம் எவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்பதை சொல்லும் இந்த டீசர் உண்மையிலேயே மிரட்டலாக இருக்கிறது.
 
மே 1, 2025 அன்று கோடையில் HIT 3 திரையரங்குகளில் வரும் என்று வீடியோ மூலம் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments