Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு நாரப்பாவை ட்ரோல் செய்யும் தமிழ் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (15:12 IST)
நாரப்பா படம் நாளை அமேசான் ப்ரைமில் ரிலீஸாக உள்ள நிலையில் தனுஷ் ரசிகர்கள் மற்றும் வெங்கடேஷ் ரசிகர்கள் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி அசுரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. தனுஷ் படத்தில் வெங்கடேஷ் நடித்திருக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் ‘நாரப்பா’ திரைப்படம் ஜூலை 20-ஆம் தேதி அமேசானின் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாரப்பாவின் டீசர், டிரைலர் மற்றும் போஸ்டர்கள் எல்லாமே அசுரனின் அப்படியே அட்டைக்காப்பியாக இருப்பதாகவும், ரீமேக் என்றால் இப்படிதான் அட்டைக்காப்பி அடிக்க வேண்டுமா என்றும் தனுஷ் ரசிகர்கள் வெங்கடேஷை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதற்கு காரசாரமாக வெங்கடேஷ் ரசிகர்களும் பதிலளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி பட டைட்டில் இல்லை. ‘சூர்யா 44’ டைட்டில் டீசர் வெளியீடு..!

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அமெரிக்காவில் கமல்ஹாசனோடு திரைக்கதை எழுதும் ‘அன்பறிவ்’ மாஸ்டர்ஸ்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments