Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி & நலன் குமாரசாமி கூட்டணி!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (07:18 IST)
சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகளாக இயக்குனர் நலன் இதுவரை எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து நலன் குமாரசாமி இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சூதுகவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைய உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறாரா?... சுற்றலில் வரும் புறநானூறு கதை!

ஊரு பூரா டாஸ்மாக் தொறந்துவச்சிட்டு, குடிக்குறவன குத்தம் சொல்றீங்க- கவனம் ஈர்க்கும் பாட்டல் ராதா டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments