Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவாஜி கேரக்டரில் நாகர்ஜுனா

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (11:50 IST)
சிவாஜி நடித்த கர்ணன் கேரக்டரில் நடிக்க, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.



இந்திய சினிமாவை, உலக அளவில் தலைநிமிரச் செய்திருக்கிறது ‘பாகுபலி’. இதனால், சரித்திரப் படங்களை எடுக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபல மலையாள எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுத, ‘மகாபாரதம்’ காவியம் படமாக்கப்பட இருக்கிறது. சுகுமாறன் இயக்க, கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாவதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் பீமனாக மோகன்லால் நடிக்க, கர்ணனாக நடிக்க நாகர்ஜுனாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. “இந்தப் படத்தின் இயக்குநர் சுகுமாறனுடன் ஏற்கெனவே விளம்பரப் படத்தில் பணியாற்றியுள்ளேன். கர்ணனாக நடிக்க என்னைக் கேட்டுள்ளார். இந்தப் படம் எப்போது ஷூட்டிங் போவார்கள் எனத் தெரியாது. ஆனால், சின்ன கேரக்டராக இருந்தாலும் இந்தப் படத்தில் நானும் இருக்க ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் நாகர்ஜுனா.

கேம் சேஞ்சர் படத்தைப் பற்றி பேச எனக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது… அஞ்சலி பதில்!

சலார் 2 படம் ட்ராப்பா?... புகைப்படம் மூலம் பதிலளித்த படக்குழு !

கேரளாவில் ரி ரிலீஸ் ஆகும் சூர்யா முருகதாஸின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

சென்சார் போர்ட் எதிர்ப்பால் தலைப்பு மாறும் ‘வடக்கன்’ படம்!

தனுஷின் ராயன் ஒதுங்கியதால் வருகிறதா விஜய் சேதுபதியின் 50 ஆவது படம்?

அடுத்த கட்டுரையில்
Show comments