Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடியாப்ப சிக்கலில் நதிகளில் நீராடும் சூரியன் படம்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (10:50 IST)
சிம்பு மற்றும் கவுதம் மேனன் ஆகிய இருவரும் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணி புரிந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்திற்கு ’நதியினிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் தாமரை பாடல்கள் எழுத இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தற்போதைய நிலை பற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. கொரோனாவால் படப்பிடிப்பு செல்வது தாமதமானது. இன்னும் 10 நாட்களில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் கௌதம் மேனன் சொன்ன கதை சுத்தமாக சிம்புவுக்குப் பிடிக்காததால் எழுத்தாளர் ஜெயமோகன் புதிதாக கதை எழுதி வருவதாக சொல்லப்பட்டது. முதல் முறையாக கௌதம் மேனனின் திரைப்படத்தில் மற்றொருவர் வசனம் எழுதுவது இதுவே முதல் முறை. இப்போது ஜெயமோகன் எழுதியுள்ள கதைக்கு சுத்தமாக நதிகளில் நீராடும் சூரியன் என்ற தலைப்பு பொருந்தவே இல்லையாம். இதனால் தலைப்பை மாற்றலாமா என்று படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments