Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பாவில் நானே வருவேன்… ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (09:00 IST)
நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான வீரா சூரா பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இது சம்மந்தமான போஸ்டரில் படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அனேகமாக செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வெளியாகும் டீசரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் ஐரோப்பா முழுவதும் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments