Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களின் வரவேற்பு - மீண்டும் படமாக்கப்படும் காதல் கனி ரசம்

Webdunia
சனி, 24 ஜனவரி 2015 (11:41 IST)
அருள்நிதி, ரம்யா நம்பீஸன் நடிக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் இடம்பெற்ற காதல் கனி ரசம் எனத் தொடங்கும் பாடல் உடனடி ஹிட்டானது.
ரசிகர்கள் காதல் கனி ரசத்தை இவ்வளவு ஆர்வமாக பருகுவார்கள் என்பது படயூனிட்டுக்கே திகைப்பான இன்ப அதிர்ச்சிதான். பாடலின் ஹிட்டுக்கு ஏற்ப படமாக்கப்பட்ட விதமும் இருக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் அப்பாடலை சென்னை புறநகரில் படமாக்கி வருகிறார்கள்.
 
குற்றமே நடக்காத ஊரில் எதற்கு போலீஸ் ஸ்டேஷன் என்று அங்குள்ள நான்கு போலீஸ்காரர்களையும் இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்வதும், இடமாற்றத்தை விரும்பாத போலீஸ்காரர்கள் அதனை தடுப்பதற்காக நல்லாயிருந்த ஊரில் பிரச்சனைகளை உருவாக்குவதும்தான் இந்தப் படத்தின் கதையாம்.
 
ம்... வித்தியாசமாகத்தான் யோசிக்கிறாய்ங்க.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments