Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லட்சுமி மேனனை ஏன் பிடிக்கும்? விக்ரம் பிரபு விளக்கம்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (11:28 IST)
விக்ரம் பிரபு நடித்துள்ள, இது என்ன மாயம் இன்று வெளியாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் மேஜிக் நிபுணராக வருகிறாராம் விக்ரம் பிரபு. மேஜிக்கை மையப்படுத்திய படம் என்பதால், மாயம் என்று பெயர் வைத்தனரா?
பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தக் கேள்வி இயக்குனர் விஜய்யிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், ஒரு இளைஞனின் வாழ்க்கையில், பல வருடங்களுக்குப்பின் அவனுடைய காதலி திரும்பி வந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கரு. படத்தின் தலைப்பில் உள்ள மாயம் என்ற சொல் காதலை குறிக்கிறது என்றார்.
 
இந்தப் படத்தில் விக்ரம் பிரபுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இருந்தும் பத்திரிகையாளர் சந்திப்பில், எனக்குப் பிடித்த நடிகை லட்சுமி மேனன் என்றார் விக்ரம் பிரபு. ஏன்?
 
என் முதல் படம் கும்கியில் எனக்கு ஜோடியாக நடித்தவர் லட்சுமி மேனன். திறமையாக நடிக்கத் தெரிந்தவர். அவர் எனக்கு பிடித்த நடிகை என்றார் விக்ரம் பிரபு. 
 
திறமையுள்ளவர்களை யாருக்குத்தான் பிடிக்காது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments