Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகதாஸ் படத்தில் நயன்தாரா...?

முருகதாஸ் படத்தில் நயன்தாரா...?

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2016 (15:59 IST)
முருகதாஸ் தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

 
முருகதாஸின் தமிழ் கஜினியில் நயன்தாரா நடித்துள்ளார். அதன் பிறகு இவர்கள் இணைந்து படம் செய்யவில்லை. இந்நிலையில், தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நயன்தாராவை அவர் அணுகியுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
 
அனாமிகா தெலுங்குப் படத்தின் புரமோஷனில் கலந்து கொள்ளாததால் நயன்தாராவுக்கு தெலுங்குப் படங்களில் நடிக்க ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில்தான் அவர் பாபு பங்காரம் படத்தின் மூலம் தெலுங்கில் ரீ என்ட்ரியானார். ஆனால், அந்தப் படத்தின் புரமோஷனிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
 
மகேஷ்பாபு படத்தில் அவர் நடிக்கிறாரா இல்லையா என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments