Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோகன்லாலுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி! - ரசிகர்கள் அதிர்ச்சி!

Prasanth Karthick
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (16:57 IST)

பிரபல மலையாள ஸ்டார் நடிகரான மோகன்லால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகரான மோகன்லால் இதுவரை 300+ படங்களில் நடித்துள்ளவர். தற்போது ப்ரித்விராஜ் இயக்கத்தில் எம்புரான், பிறகு பாரோஸ் என்ற படத்திலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் மோகன்லால்.

 

இந்நிலையில் இன்று திடீரென மோகன்லாலுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவர் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு தீவிர காய்ச்சல் மற்றும் தசை வலியும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மோகன்லாலுக்கு வைரல் தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அவர் 5 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மோகன்லால் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்தித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு! முதல் விருது எனக்குதான்! சீட் போட்டு வைத்த ராஜமௌலி!

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments