Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு நிலச்சரிவு.. நேரில் ஆய்வு செய்தவுடன் ரூ.3 கோடி நிவாரண நிதியளித்த நடிகர்..!

Mahendran
சனி, 3 ஆகஸ்ட் 2024 (12:57 IST)
வயநாடு நிலச்சரிவை நேரில் ஆய்வு செய்த பிரபல மலையாள நடிகர் ஆய்வுக்கு பின்னர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதியாக அருவாய் 3 கோடி ரூபாய் அளித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தனர். இதனை அடுத்து இராணுவத்தின் உதவியுடன் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் நிலச்சரிவு ஏற்பட்டு ஐந்து நாள் ஆகிய பின்னரும் கூட இன்னும் சிலர் உயிருடன் மீட்க பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில தமிழ் நடிகர்கள் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ள நிலையில் நடிகர் மோகன்லால் இன்று 3 கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார் 
 
வயநாடு பகுதிக்கு நேரில் சென்று அவர் பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் நிவாரண பணிகள் குறித்து ராணுவத்தினரிடம் கேட்டார். அதன் பின்னர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூபாய் 3 கோடி ரூபாய் அளித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments