Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எம்புரான்’ சர்ச்சை காட்சிகள்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் மோகன்லால்..!

Siva
திங்கள், 31 மார்ச் 2025 (07:48 IST)
மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில இந்து அமைப்புகள் இதில் உள்ள சில காட்சிகள் குறித்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குஜராத்தில் நடந்த ஒரு நிகழ்வின் காட்சிகள் அவர்கள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.
 
இதனைத் தொடர்ந்து, மோகன்லால் தனது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரி, “இந்த தவறுக்கு நான் மட்டுமல்ல, என் படக்குழுவும் முழுப்பொறுப்பு ஏற்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
அவரது மன்னிப்பு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
“லூசிபர்” படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படத்தின் கருத்து மற்றும் தயாரிப்பு குறித்து சில அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் எழுந்துள்ளன. இது சிலருக்கு மனவருத்தம் கொடுத்திருப்பதை நான் புரிந்துகொண்டேன்.
 
ஒரு கலைஞராக, எந்த ஒரு மதத்தையோ, அரசியல் சிந்தனையோ எதிர்ப்பதற்காக நான் ஒரு திரைப்படத்தையும் உருவாக்க மாட்டேன். அது என் கடமை.
 
அதனால், ‘எம்புரான்’ படத்தில் உள்ள சில காட்சிகள் எதிர்ப்பை உருவாக்கியதால், அதை நீக்குவதற்கான முடிவை எடுத்து விட்டோம்.
 
நானும், எங்கள் படக்குழுவும் உங்கள் மனவருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம். கடந்த நாற்பது ஆண்டுகளாக, உங்கள் ஆதரவுடனே இந்த சினிமா பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். உங்கள் அன்பும் நம்பிக்கையும் தான் எனக்கு மெய்ப்பொருள். அதற்காக நான் என்றும் கடமைப்பட்டவராகவே இருப்பேன்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

நமது உண்மை… நமது வரலாறு.. ராமாயணம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட யாஷ்..!

மார்கோ 2 கண்டிப்பாக வரும்.. தயாரிப்பு நிறுவனம் உறுதி!

நான் சொன்னதைக் கேட்ட பாலு மகேந்திரா.. என் மேல் கோபமான வெற்றிமாறன்… இயக்குனர் ராம் பகிர்ந்த சம்பவம்!

ஸ்ரீகாந்த்& கிருஷ்ணாவின் ஜாமீன் வழக்கு…தீர்ப்பை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments