Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் டீசர் ; 1.5 லட்சம் பேருக்கு பிடிக்கவில்லை - படக்குழு அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (15:49 IST)
அட்லீ இயக்கத்தில்,  நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீசர் வீடியோ நேற்று வெளியானது.


 

 
இந்த டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்களும் இந்த டீசரை பாராட்டி வருகின்றனர். அதேபோல், உலகில் இதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு மெர்சல் டீசருக்கு கிடைத்துள்ளது. 
 
டீசர் வெளியிடப்பட்ட 7 மணி நேரத்தில் யூடியூப்பில் 65 லட்சம் பாரவையாளர்களை பெற்றது. இதற்கு முன், அஜீத் நடித்த விவேகம் பட டீசர், வெளியான 12 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றதே சாதனையாக இருந்தது.
 
ஆனால், குறைந்த நேரத்தில் அதிக லைக்குகளை பெற்ற டீசர் வீடியோ என்ற பெருமை விஜயின் மெர்சல் பட டீசர் வீடியோவிற்கு கிடைத்துள்ளது. இதுவரை, 70.18 லட்சம் பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.
 
இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், 1.57 லட்சம் பேர் இந்த வீடியோவை டிஸ் லைக் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் அஜீத் ரசிகர்கள் எனக் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments