Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் நான்கு விருதுகளை குவித்த 'மெர்சல்

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (08:00 IST)
இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சுமார் ரூ.200 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் பட பட்டியலில் இணைந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விஜய் விருது வழங்கும் விழாவில் இந்த படம் நான்கு  விருதுகளை வென்றுள்ளது.
 
'மெர்சல்' திரைப்படம் ஏற்கனவே ஒருசில விருதுகளை வென்றுள்ள நிலையில் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விஜய் விருதுகள் விழாவில் நான்கு  முக்கிய பிரிவுகளில் விருது பெற்றுள்ளது
 
சிறந்த பாடலுக்கான விருது 'ஆளப்போறான் தமிழன்' என்ற பாடலுக்கும், சிறந்து இயக்குனர் விருது இயக்குனர் அட்லிக்கும், சிறந்த வில்லன் விருது எஸ்.ஜே.சூர்யாவுக்கும் கிடைத்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த நடிகர் விருதை 'விக்ரம் வேதா' படத்திற்காக விஜய்சேதுபதி தட்டிச்சென்றுவிட்டதால் அந்த விருதினை மட்டும் 'மெர்சல்' மிஸ் செய்துவிட்டது.
 
இருப்பினும் ஒரே நாளில் நான்கு விருதுகளை 'மெர்சல்' திரைப்படம் குவித்துள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments