Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்துவர்: மீராமிதுன் சர்ச்சை டுவீட்

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (12:12 IST)
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதும் சரி, நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் சரி அவ்வப்போது ஒரு சிலரை குற்றம் சாட்டி வந்து கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் கூட த்ரிஷா குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மீராமிதுன் ரஜினிகாந்த் மற்றும் விஜய் குறித்து ஒரு சர்ச்சை கருத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் தன்னை ஒதுக்கி வைத்து விட்டதாகவும் அதற்கு நன்றி என்றும் அதனால்தான் தற்போது தான் சூப்பர் மாடல் ஆக இருக்கிறேன் என்றும் கோலிவுட் எனக்கு எதிராக இருப்பதால் பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் பணிபுரிந்து வருகின்றேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகம் என்னை ஏன் டார்கெட் செய்கிறது என்று எனக்கு புரியவில்லை என்றும் என்னை விமர்சிப்பது மட்டும் தான் அவர்களுக்கு ஒரே வேலையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் இன்னொரு டுவிட்டில் தமிழ்நாடு தமிழர்களுக்கு உரியது என்றும் இந்துக்களுக்கு உரியது என்றும் ஆனால் இங்கு மலையாளிகளும் கிறிஸ்துவர்களும் அதிக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றதும் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றும் எனக்கு கோபம் வந்தால் மதுரையை எரித்த கண்ணகி போல் நான் தமிழ்நாட்டை எரித்து விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
மேலும் இன்னொரு டுவிட்டில் ரஜினிகாந்த் கன்னடர் என்றும் விஜய் கிறிஸ்துவர் என்றும் இருவரும் என் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றார் என்றும் இதுகுறித்து சைபர் கிரைமில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்றும் மீராமிதுன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மீராமிதுனின் இந்த டுவிட்டுக்களுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவுடன் ஜோடி சேரும் சென்சேஷனல் நடிகை… சிம்பு 49 பட அப்டேட்!

ஏன் ‘அசல்’ படத்துக்குப் பிறகு எனக்குத் தமிழில் வாய்ப்பு வரவில்லை எனத் தெரியவில்லை… பாவனா வருத்தம்!

விஷ்ணு விஷால் & அருண் ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தால் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸில் மாற்றம்!

சார்பட்டா பரம்பரை 2 தற்போதைக்கு இல்லையாம்.. இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments