Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகசிய அறையில் மீரா! ஓட்டு போட்டவர்கள் எல்லாம் முட்டாள்களா?

Webdunia
ஞாயிறு, 28 ஜூலை 2019 (13:56 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று மீரா வெளியேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டுவிட்டாலும், அவர் முழுவதுமாக வெளியேற்றப்படவில்லை என்பதும், வீட்டில் இருந்து ரகசிய அறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார் என்று வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களும் பார்வையாளர்களை முட்டாளாக்கியுள்ளது. குறிப்பாக ஓட்டு போட்ட பார்வையாளர்களை ஒட்டுமொத்தமாக பிக்பாஸ் முட்டாளாக்கியுள்ளார்.
 
மீராமிதுன் பிரச்சனைக்குரியவர் என்று தெரிந்தும், அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததே பெரிய தவறு என்று சக போட்டியாளர்களான அபிராமி, சாக்சி ஆகியோர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது அவரை வெளியேற்ற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தும், அதனை பயன்படுத்தாமல் மீண்டும் மீராவை வீட்டுக்குள் செல்ல வைக்க பிக்பாஸ் முயற்சிப்பது முழுக்க முழுக்க டி.ஆர்.பியே காரணம் அன்றி வேறு இல்லை என்பதுதான் உண்மை
 
இன்றைய அடுத்த புரமோவில் 'ரகசிய அறையை பயன்படுத்த விரும்புகிறீர்களா? என்ற கேள்வியை கமல்ஹாசனே கேட்டு, அவரே 'நீங்கள் விரும்புகிறீர்கள்' என்று பதிலளித்துவிட்டு மீராவை ரகசிய அறைக்குள் செல்ல வைக்க ஒத்துழைக்கின்றார். மொத்தத்தில் பிக்பாஸ் என்பது உண்மையில் ஒரு ரியாலிட்டி ஷோ அல்ல, திரைக்கதை எழுதி நடத்தும் ஒரு நாடகம் என்று பலர் கூறி வருவது உண்மைதானோ? என்ற சந்தேகம் அதிகரித்து கொண்டே வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments