Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸில் அவ்ளோவ் சண்டை...இப்போ மீரா கூடவே பேஷன் ஷோ!

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (14:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களால் ஆரம்பத்திலிருந்தே வெறுக்கப்பட்ட மீரா மிதுனை போக போக மக்களும் வெறுக்க தொடங்கினர். மாடல் அழகிகளை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாலும் சேரன் தன்னை தகாத முறையில் தொட்டதாக கூறி பொய் நாடகமாடியதாலும் மக்களால் வெறுக்கப்பட்டவர் மீரா மிதுன். 


 
மேலும் மீரா மிதுனுடன் சாக்ஷி, அபிராமி இருவருக்கும் பல்வேறு சண்டைகளும் வெடித்தன. இதனால் அபிராமி இந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதே எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி அதற்கான காரணத்தை சொன்னார். அதாவது,  மீராமிதுன் பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டதாக கூறினார். ஆனால் , மீராமிதுன், நான் தான் அபிராமியை தான் மாடலிங் துறைக்கு அறிமுகம் செய்தேன் என்றும் கூறியிருந்தார். பின்னர் அவர் மக்களால் சேரன் விஷயத்தில் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயரை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 


 
ஆனால் தற்போது பிக்பாஸில் வெளியேறிய மீரா மிதுன் மற்றும் சாக்க்ஷி இருவரும் ஒரு பேஷன் ஷோவில் பங்கு பெற்றுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.  பிக்பாஸ் வீட்டில் எதிராளியாக இருந்த இருவரும் தற்போது ஒரு நிகழ்ச்சியில் சேர்ந்து பங்கேற்றிருப்பது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறன் எனும் மாஸ்டர் பில்ம்மேக்கர்… ‘விடுதலை 2’ படத்தைப் பாராட்டிய தனுஷ்!

சூர்யா 4 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?... அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்!

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments