Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுராக் காஷ்யப் மேல் மி டூ குற்றச்சாட்டு… ஆதரவு தெரிவித்த முன்னாள் மனைவி!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (11:16 IST)
இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் மீது பயல் கோஷ் என்ற நடிகை பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் உலக திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முகமாகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இப்போது அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் மீது பயல் கோஷ் என்ற நடிகை தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டை வைத்தார். இந்த குற்றச்சாட்டு பாலிவுட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அனுராக் காஷ்யப் மத்திய அரசை விமர்சித்து வருவதால் அவரின் பெயரைக் கெடுக்கவே இவ்வாறாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக அவரது முன்னாள் மனைவியும், அவரின் எல்லா படங்களின் எடிட்டருமான ஆர்த்தி பஜாஜ், நடிகை தாப்ஸி பண்ணு மற்றும் நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருடன் இருக்கும் போது தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்ததாகவும் அனுராக் காஷ்யப் மிகவும் நல்ல மனிதர் எனவும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

அடுத்த கட்டுரையில்