Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் படம் தெலுங்கில் வெற்றி…விஜய்யை சந்தித்த விநியோகஸ்தர்!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (10:35 IST)
மாஸ்டர் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் விஜய்யை சந்தித்து நன்றி கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் முதல் முறையாக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியானது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் படுதோல்வி என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாரவிடுமுறை முடிந்துள்ள நிலையில் பல திரையரங்குகளில் மாஸ்டர் படத்தின் வசூல் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனாலும் மாஸ்டர் படத்துக்காக அதிக தொகை செலவு செய்துள்ளதால் மேற்கொண்டும் மாஸ்டர் படத்தையே ஓட்ட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் வரை நல்ல லாபம் பார்த்துள்ளனர். இந்த படத்தை வாங்கிய மகேஷ் கொனேரு விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷாருக்கான் வாங்கிய நிலத்தில் வந்த வில்லங்கம்! 9 கோடி ரூபாயை திரும்ப தரும் மகாராஷ்டிரா அரசு!

விஜய்யின் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில் அறிவிப்பு.. மாஸ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

ஸீரோ பேலன்ஸில் குடும்பம் நடத்துவது எப்படி? உண்மையை நகைச்சுவையாக சொன்ன ‘குடும்பஸ்தன்’! - திரை விமர்சனம்!

மதிப்புமிக்க பத்ம விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.. அஜித் அறிக்கை..!

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments