Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Always Be Happy: விஜய் பாடியுள்ள "ஒரு குட்டி கத" பாடல் இதோ!

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (17:00 IST)
தளபதி விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே மீதம் இருப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என படக்குழுவினர்களிடமிருந்து தகவல் வெளிவந்தது.   லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். 
 
கல்லூரி பேராசிரியாக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவரது மாணவராக சாந்தனு நடித்துள்ளார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று விஜய் பாடியுள்ள  ‘ஒரு குட்டி கதை' என்ற முதல் சிங்கிள் டிராக் சற்றுமுன் படக்குழு வெளியிட்டுள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ள இப்பாடலை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த பாடல்... 

தொடர்புடைய செய்திகள்

ரஜினியின் கூலி படத்துக்காக பாலிவுட் நடிகருக்கான தேடல்!

மஞ்சும்மள் பாய்ஸ் படக்குழுவினருக்கு இளையராஜா நோட்டீஸ்!

சிம்புவின் அடுத்த படத்தில் இரண்டு பாலிவுட் நடிகைகளா?... லேட்டஸ்ட் தகவல்!

அஜித்தின் குட் பேட் அக்லி போஸ்டரால் களைகட்டிய வியாபாரம்!

2024 ஆம் ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர்… 100கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய அரண்மனை 4!

அடுத்த கட்டுரையில்
Show comments