Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 64 படத்தின் அட்டகாசமான டைட்டில் இதுதான்

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (17:06 IST)
தளபதி விஜய் நடித்துவரும் 64வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது தெரிந்ததே. சென்னை, டெல்லி மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி 2ம் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் விஜய், விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் ‘மாஸ்டர் ‘ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments