Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"நேர்கொண்ட பார்வை பக்கா மாஸ் அப்டேட்" - போனி கபூர் வெளியிட்ட தரமான தகவல்!

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (18:25 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கும் ‘நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பிங்க்' படத்தின் ரீமேக். 


 
இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்திஇல் அஜித்திற்கு ஜோடியாக முதன் முறையாக தமிழில் வித்யா பாலன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இப்படத்தை அடுத்து இந்தியில் அஜித்தை வைத்து ஒரு படம் எடுப்பேன் என்று கூறியிருந்தார் போனி கபூர். அப்படி மட்டும் நடந்தால் அஜித்தின் ரசிகர்களுக்கு பேரின்பமாக இருக்கும். 
 
இன்று மாலை 6 மணிக்கு படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்ததையடுத்து சற்றுமுன் அஜித்தின் மாஸான போஸ்டர் ஒன்றுடன் இப்படத்தின் ரிலீஸ் தேதியயை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
 
அந்தவகையில் நேர்கொண்ட பார்வை படம் வருகிற ஆகஸ்ட் 8ம்  தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் போனிகபூர். இதனால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments