Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க செல்லாக்குட்டி வந்துட்டாடா..! – மார்வெல் ரசிகர்களுக்கு செம ட்ரீட்

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (13:01 IST)
உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் மார்வெல் படங்கள் வெளியாகாத சூழலில் மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வெப் சிரிஸை களமிறக்கியுள்ளது மார்வெல் ஸ்டுடியோஸ்.

சூப்பர்ஹீரோ படங்கள் எடுப்பதில் முன்னணி நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸின் “ப்ளாக் விடோ” திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்புகள் காரணமாக ப்ளாக் விடோ பட ரிலீஸ் தள்ளி போனதுடன், அடுத்தடுத்த திரைப்பட பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் மார்வெல் படங்களே வெளியாகததால் மார்வெல் ரசிகர்கள் மன வருத்தத்தில் இருந்த நிலையில் மார்வெலின் புதிய வெப் சிரிஸான “வாண்டா விஷன்” ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வாண்டா என்ற அதிசய சக்தி படைத்த பெண்ணுக்கும், விஷன் என்ற ரோபோவுக்கும் இடையேயான காதல் கலந்த அட்வெஞ்சர் கதைதான் இந்த வாண்டா விஷன்.

இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ்ஸில் வெளியாகிறது. இந்தியாவில் ஹாட்ஸ்டார் மூலமாக பார்க்கலாம் என்றாலும் ப்ரீமியம் ப்ளான் உள்ளவர்கள் மட்டுமே இதை காண முடியும். விஐபி சந்தாதாரர்களுக்கு இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாண்டா விஷன் ட்ரெய்லரை காண…

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments