Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பல்டி அடித்த மன்சூர் அலிகான்… தேர்தலில் போட்டியிடுவது உறுதி!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (10:05 IST)
நடிகர் மன்சூர் அலிகான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என மீண்டும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா நடிகரான மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நிலையில் முந்தைய தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கப்படாத நிலையில், கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். அதையடுத்து  அந்த தொகுதியில் அவர் பிரச்சாரமும் மேற்கொண்டார். ஆனால் அவருக்கு மக்களிடம் போதுமான வரவேற்புக் கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது. மேலும் பலரும் ‘யாரிடம் காசு வாங்கிக்கொண்டு இந்த தொகுதியில் நிற்கிறீர்கள்’ எனக் கேட்டதால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை மன்சூர் அலிகான் எடுத்ததாகக் கூறியிருந்தார்.

ஆனால் இப்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன் எனக் கூறியுள்ளார். அது சம்மந்தமாக ‘மக்களை நம்பி தேர்தலில் இறங்கிவிட்டேன். என்னை இங்கிருந்து அப்புறப்படுத்த திட்டம் போட்டு செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தேர்தலில் போட்டியிடுவது உறுதி. தென்னந்தோப்பு சின்னம் கேட்டுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments