Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் சிக்னலை வைத்து மனோ மகன்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயற்சி.. விரைவில் கைது?

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (08:45 IST)
மதுபோதையில் 16வயது சிறுவனை தாக்கிய விவகாரத்தில் சினிமா பின்னணி பாடகர் மனோவின் 2 மகன்களை கைது செய்ய காவல்துறை தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனோ மகன்களின் செல்போன் சிக்னலை வைத்து தலைமறைவாக உள்ள பின்னணி பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க நெருக்கியதாகவும், இன்னும் ஒரிரு நாட்களில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பாடகர் மனோவின் மகன்கள் ரபிக் , சாகீர் ஆகிய இருவரின் செல்போன் சிக்னல் ஈசிஆர் பகுதியை காண்பித்ததால் இருவரையும் பிடிக்க  5 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் ஈசிஆர் விரைந்ததாகவும் தெரிகிறது.

வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை விரைவில் மனோ மகன்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் என்றும், செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் சிடிஆர் மூலம் கண்காணித்து தலைமறைவாக உள்ள இருவரையும் கைது செய்ய தனிப்படை தீவிரம் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Siva
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments